நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்- கராத்தே தியாகராஜன்!

ரஜினிகாந்த் இந்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரமிக்கவில்லை. ஆனால் மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கொரோனவால் ரஜினியின் கட்சி உதயம், ஆகஸ்டிலிருந்து நவம்பருக்கு தள்ளி போனது எனவும், ஸ்டாலின் கூறிய “ஒன்றிணைவோம் வா” மக்களிடையே சென்றடையவில்லை, ஆனால் ரஜினி கூறிய “சும்மா விடக்கூடாது” என்ற கருத்து, உலகளவில் சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025