மீண்டும் நாளை மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி.!

ரஜினிகாந்த், மீண்டும் நாளை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் னைப்பெற்ற கூட்டத்தில் தனிப்பட்ட ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் இருப்பதாக ரஜினி செய்யலர்களிடம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாளை நடைபெற உள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் கூறப்படுகிறது.