ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்கலாம் -அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

Published by
Venu
  • பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறினார்.
  • ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய  ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக,திமுக ,திராவிடர் கழகம் ,விசிக ,மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

ஆனால் கருத்துக்களாக மட்டும் அல்லாமல் ரஜினிக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவையினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் ரஜினிகாந்த் போயாஸ் கார்டனில் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூறிய கருத்துக்கள் அனைத்தும் கற்பனையானவை அல்ல.நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக outlook india என்ற பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை அறிந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில் இன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் ரஜினி கருத்து குறித்து கூறுகையில், ஏன் ரஜினி நடைபெறாத விஷயத்தை கூறி மக்களை திசைதிருப்ப பார்க்கிறார். ஏற்கனவே கூறியிருக்கிறோம் இந்த விவகாரத்தில் ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.தந்தை பெரியார்,அண்ணா,எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு இழுக்கு ஏற்பட்டால் அதை கண்டித்து அதிமுக நிச்சயம் குரல் கொடுக்கும்.தேவையில்லாததை ரஜினி பேசுவதற்கு பதிலாக வாயை மூடி மவுனமாக இருக்கலாம்.ரஜினியின் பேச்சுக்கு திமுக வேண்டுமானால் பயப்படலாம்.அதிமுக பயப்படாது.ரஜினியின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார்.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

4 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

6 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago