சமூக வலைத்தளங்களில்,நாட்டையே உலுக்கிய குரங்கணி தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத ரஜினியால் தமிழத்தில் என்ன மாற்றம் கொண்டு வந்துவிட முடியும் என விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.
தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை திவ்யா (25) செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
குரங்கணி வனப் பகுதியில் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு கடந்த சனிக்கிழமை சென்றனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். இவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேரும், மருத்துவ சிகிச்சை பலனின்றி 2 பேர் என 11 பேர் இறந்தனர். 10 பேர் சிறுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்கள் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல்; வேண்டாம் இறந்தவர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத ரஜினிகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன் நலம்பெற வாழ்த்து கூற மனம் வந்தது எப்படி என சமூக வலைத்தளங்கில் கடுமையான விமர்சனங்கள் வரைலாகி வருகின்றன.
அரசியல் கட்சி தொடங்கி உள்ள அவரது நண்பர் கமல்ஹாசன் இரங்கலும், ஆறுதலும் கூறுகிறார். என்னை வாழ வைத்த தமிழக மக்கள் என வாழ்க்கை வாழ்த்து கூறும் ரஜினி, அவர்கள் துயரத்தில் இருக்குமபோது ஆறுதலோ, இரங்கலோ தெரிவிக்க மனமில்லாமல் போனது ஏன்? என்று கேட்டிருப்பதுடன் அவரது மனதில் கன்னடன் என்ற உணர்வும், நடிகன் என்ற உணர்வு மட்டுமே உள்ளது. மக்களுக்கான சேவை எல்லாம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது ரஜினிகாந்த் ஒரு செலக்ட்டிவ் அம்னீஷியா என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…