ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிறிது நேரங்கள் கழித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவரிடம் கமல் பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இது குறித்து ரஜினி கூறுகையில், மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று கூறினார்.இவர்கள் இருவரும் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ரஜினி -கமல் என இருவரும் இணைந்தாலும் சரி ,தனித்து நின்றாலும் சரி அதிமுகவிற்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார்.மேலும் ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என்று தெரிவித்தார்.மேலும் 2021ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் என்றும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024