ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் தாக்கம் ஏற்படாது – திருமாவளவன்
ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஒருபுறம் அவ்வையார், மறுபுறம் திருக்குறள் படிக்கிறார், இன்னொரு பக்கம் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும், சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவர் உருவப்படத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார்.ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், வாருங்கள் பணியாற்றுவோம் என்று மறைமுகமாக நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.