நடிகர் கமல்ஹாசன் கூறியது , நடிகர் ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வார இதழில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ரஜினியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திப்பது குறித்த கேள்வி, இருவரையும் துரத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று ரஜினி கூறிய கருத்தை வழிமொழிவதாக தாம் ஏற்கனவே அறிவித்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இருவரும் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இருவருடைய கொள்கைகளும் பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார். அதனால், இது இப்போது எடுக்கக் கூடிய முடிவல்ல என்றும், அது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன், கமல் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சிலர் கூறி வந்துள்ள நிலையில், தனது நிலைப்பாட்டை கமல் தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…