பெரியார் குறித்த சர்ச்சை பேச்சின் எதிரொலி…நடிகர் ரஜினிக்கு துனை இராணுவ பாதுகாப்பு…க்ஷ்
- பெரியார் குறித்த ரஜினியின் கருத்து எதிரொலி.
- துனை ராணுவ பாதுகாப்பு என உள்துறையில் முனுமுனுப்பு.
சேலத்தில், பெரியார் நடத்திய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஊர்வலம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் பேசியது, திராவிட கழகம்., மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்னொரு பக்கம்,இந்த கருத்திற்க்கு ரஜினியைப் பாராட்டி, ‘மீம்ஸ்’களும் வலம் வருகின்றன. ஏற்கனவே, ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளித்தது. இதற்கிடையே, ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளது. இதில், ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என, அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம். ஏற்கனவே ரஜினியும், கட்கரியும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். இந்நிலையில், இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஆலோசனை நடத்திஉள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு, மத்திய அரசு விரைவில் துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கும் என கூறப்படுகிறது. அப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டால், திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு தரப்பட்ட அதே பாதுகாப்பு, ரஜினிக்கு தரப்படவிருக்கிறது.