முதல்வர் விக்னேஷ்வரனுடனான சந்திப்பு விவகாரம்…நடிகர் ரஜினிக்கு விசா வழங்க மறுப்பு.. இலங்கை அரசு அதிரடி முடிவு..

Default Image
  • தமிழக முன்னனி நடிகர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவர்  தொடர்ச்சியாக படம் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் இலங்கை வடக்கு மாகாண முதல்வருடன் சந்திப்பு விவகாரத்தில் விசா வழங்க இலங்கை அரசு முடிவு. 

இவர் எப்போது தான் அரசியலுக்கு வருவார்  என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும்  உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இரண்டு நாட்களுக்கு முன்பு  சென்னையில் வைத்து  சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் இந்த கூட்டத்தில்  இருந்தனர். இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்தின்  அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை குறித்தும் பேசினார்கள்.

Image result for RAJINIKANTH- VIGNESHWARAN MET

அதேபோல் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் நடிகர் ரஜினியை இலங்கைக்கு வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும். அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில்  தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதை  இலங்கை ஊடகங்கள்,  இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.இதன்படி அரசியல் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசு எப்போதும்  விசா வழங்காது. எனவே இந்த விவகாரத்தில் நடிகர்  ரஜினிக்கும் விசா வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த செய்தி தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்