1971ல் நடந்த போராட்டத்தில் கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள்… ரஜினி கூறியது உண்மையா.. ஓர் சிறப்பு பார்வை…

Default Image
  • ரஜினியின் கருத்து குறித்த ஓர் தேடல்.
  • ரஜினியின் கருத்து உண்மை, அன்றைய நாளிதழ்கள்  ஆதாரம். 

தலைநகர் சென்னையில் நடந்த, துக்ளக் வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர்,  ‘முரசொலி படிப்பவர்கள் தி.மு.க-வினர் என்றும், துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் திமுகவை நேரடியாக விமர்சித்து இருந்தார். மேலும், 1971-ல், ராமர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலம் சென்றவர், பெரியார்’ சேலத்தில் ஈ.வெ.ரா., அவர்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று பேசியதன் விளைவாக ஆர்பாட்டம், ரஜினி வீடு முற்றுகை என போராட்டம் நடந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த்  ‘உண்மையை தான் பேசினேன் என ஆங்கில பத்திரிகையை ஆதாரமாக காட்டி மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று பேட்டியளித்தார்

Image result for பெரியார் 1971-ல் சேலம் போராட்டம்

1971  ஜனவரி மாதம் 26ம் நாள் – திராவிடக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையொட்டி  ஊர்வலம் ஒன்றில்  700 பேர்களுக்கு மேல் கூடி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இந்து கடவுள் பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள் கொண்ட அட்டைகளை அந்த ஊர்வலத்தில் தாங்கிச் சென்றனர். அதில் தமிழ்கடவுளான  முருக கடவுள் பிறப்பை பற்றி ஆபாசமான அட்டைகள் இருடம்பெற்றிருந்தன. அதிலும், 10 அடி உயரமுள்ள ராமர் சிலை ஒன்று ஒரு வண்டியில் கொண்டு வரப்பட்டது. வண்டிகளில் பலர் நின்று கொண்டு செருப்புகளால் ராமர் சிலையை அடித்துக்கொண்டே இருந்தனர். ஊர்வலத்தின் முடிவில் மரத்தினால் செய்யப்பட்டிருந்த ராமர் சிலை ஒன்றுக்கு தீயும்  வைக்கப்பட்டது.

Image result for பெரியார் 1971-ல், ராமர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து

எனவே, தெய்வ பக்தி உள்ளவர்களின் மனதை  புண்படுத்தும் இத்தகைய ஆபாச அட்டைகள் கொண்ட ஊர்வலத்தை அப்போது காவல்துறை அதிகாரிகள் தடுக்காதது பற்றி நகர மக்கள் ஆச்சர்யம் தெரிவித்தனர். அதற்க்கு அப்போதைய காவல்துறை சூப்பிரண்டென்ட்,  மாநாட்டின் நிர்வாகிகள் எந்த மாதிரியான அட்டைகள் கொண்டு பரப்ப போகிறார்கள் என்ற விபரம் தனக்கு தெரியாது என்று மளுப்பளாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்