ரஜினி நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையில்லை.. பாஜகவிற்கு தான் தேவை- சீமான்..!

Default Image

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கரின் புகைப்படத்த்திற்கு மலர் தூவி மாறியதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ரஜினி 45 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார், மன்றங்கள் வைத்துள்ளார். ஆனால், கமலஹாசன் அவர்கள் தனது மன்றங்களை கலைத்து விட்டு நற்பணி இயக்கங்களாக மாற்றினார். ஆனால் ரஜினி ரசிகர் மன்றங்களாகவே வைத்துள்ள்ளார். இத்தனை ஆண்டுகளில் மக்கள் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகள், அதில் செயல்பட்ட செயல்பாட்டாளர்களில் நீங்கள் ஆரம்பிக்கும் கட்சியை ஒருங்கிணைத்து, வழிநடத்த தகுதி பெறவில்லையா..? என கேள்வி எழுப்பினர்.

 அதில் ஒருவரை ஏன் நீங்கள் தேர்வு செய்யவில்லை, காங்கிரஸ் மற்றும் பல கட்சியிலிருந்து விலகிய வந்த தமிழருவி மணியன் மற்றும் பாரதிய ஜனதாவில் அறிவுசார்  பிரிவில் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி அவர்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராகவும்

இவர்களை வைத்துக்கொண்டு எப்படி மதசார்பற்ற அரசியல் எப்படி உருவாக்க முடியும், உங்கள் ரசிகர் மன்றத்தில் ஒருவர்கூட இதுவரை உங்கள் கட்சியை வழிநடத்த திறமையானவர்களாக இல்லை.. ஒருவர் பாஜகவும் மற்றொருவர் காங்கிரசை சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரை வைத்து மாற்றத்தை ஏற்படுத்துவன் என கூறினார். இந்த நாட்டையும் மாற்ற வேண்டியது காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்து தான் மாற்ற வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

மேலும்,  விஜயகாந்த் ஒரு வீரர் நாங்களெல்லாம் ஜெயலலிதா மற்றும் கலைஞர் அவர்கள் இருந்தபோது கட்சி தொடங்கி அவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம். அப்படித்தான் விஜயகாந்த் அவர்களும் செய்தார்கள். தற்போது ஜெயலலிதா, கலைஞர் 2 ஆளுமைகளும் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஒரு மாற்றத்தை தாரேன் என்று சொல்லிட்டு, ஜனவரி கட்சி ஆரம்பித்து… பிப்ரவரியில் தேர்தல், மார்ச்சில் அவர்  முதல்வராகி விடமுடியுமா..? என கேள்வி எழுப்பினார்.

படத்தில் நடித்து புகழ் பெற்றால் மட்டும் அரசியல் வருவதற்கு போதுமானதா..?ரஜினிகாந்த்தின் தேவை இந்த நாட்டு மக்களுக்கு எங்கு தேவைப்படுகிறது. எந்த பிரச்சினையில் அவர் முகம் கொடுத்து போராடி, எந்த பிரச்சினைக்கும் தீர்வு சொல்லியுள்ளார். நான் வந்தால் தீர்ப்பேன் என கூறியுள்ளார். அவர் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையில்லை. ரஜினி யாருக்கு தேவை என்றால் குருமூர்த்தி மற்றும் பாஜகவிற்கு தான் தேவை என சீமான் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்