சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அரசியலுக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் அதிகாரபூர்வ அரசியல் கட்சியை தொடங்கவில்லை. இருப்பினும் அவர் கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஒரு சிலரும், வரமாட்டார் என்று ஒரு சிலரும், வழக்கம்போல வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு இருப்பதாக ஒரு சிலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஜக எம்.பி சுப்ரமணியசுவாமி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி, திரைத்துறையினர் அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருக்க வேண்டுமே தவிர, தலைவராக வருவதற்கு நினைக்கக் கூடாது என தெவித்தார். மேலும், நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார் என விமர்சித்துள்ளார். பின்னர் சுப்பிரமணிய சுவாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…