பாஜகவின் மற்றொரு முகமே ரஜினி! விசிக தலைவர் விளாசல்!

பாஜக, ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே, நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். பாஜகவின் மற்றொரு முகமே ரஜினி என விசிக தலைவர் விமர்சனம்.
ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக, அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறியிருந்த நிலையில், சமீபத்தில் தனது உடல்நிலை குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று கூறினார். ஆனால் அவரது ரசிகர்கள் பலரும் அவரை அரசியல் கட்சி தொடங்குமாறு தொடர்ந்து கூறி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்தார். இவரது இந்த அறிவிப்பிற்கு, அரசியல் பிரபலங்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் இது குறித்து கூறுகையில், பாஜக, ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே, நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என்றும், பாஜகவின் மற்றொரு முகமே ரஜினி என்று விமர்சித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025