ரஜினி ஆன்மீகவாதி, தேசியவாதி, அவர் அரசியலுக்கு வந்தால் பா.ஜ.க வரவேற்கும் – எல் முருகன்
ரஜினி ஆன்மீகவாதி, தேசியவாதி, அவர் அரசியலுக்கு வந்தால் பா.ஜ.க வரவேற்கும் என்றும் மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தின் பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதாகவும், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என கூறிய அவர், பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். நரேந்திர மோடியை முன்னிறுத்தியே தமிழகத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளோம். இதையடுத்து, நடிகர் ரஜினியை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ஆன்மீகவாதி, தேசியவாதி, அவர் அரசியலுக்கு வந்தால் பா.ஜ.க வரவேற்கும் எனவும் பதிலளித்தார் என தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.