“ரஜினி ஒரு பரட்டை” ரஜினியை கலாய்த்த அமைச்சர்..!!
இன்று சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அதிமுக தொடங்கப்பட்ட போது சாதாரண பரட்டையாக இருந்தவர் என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்
அறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் நகர அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கவில்லை என்றால், களத்தில் இறங்கிப் போராடி இருப்பேன் என்று ரஜினி பேசியதை சுட்டிக்காட்டினார்.
இன்று வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் என கூறிய சி.வி.சண்முகம், அதிமுக தொடங்கிய காலத்தில் ரஜினி ஒரு சாதாரண பரட்டை என குறிப்பிட்டார்.இது தற்போது ரஜினி ரசிகர்களை கோவத்துக்கு ஆளாக்கியுள்ளது.
DINASUVADU