கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஆதரவற்றவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் ரஜினி ரசிகர்.!
- கோவை இடையர்பாளையம் பகுதியில் முடிவெட்டும் கடை வைத்து நடத்தி வரும் தேவராஜ், ரஜினி ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றிக்கொண்டார்.
- கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இலவசமாக செய்து வந்தார். இதை செய்யும் போது மனது நிம்மதியாகவும், அன்றைய பொழுது சிறப்பாகவும் அமையும் என்றார்.
கோயம்பத்தூர் மாவட்டம் சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றி அனைவரிடமும் சொல்லி வருகிறார். இவர் இடையர்பாளையம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். 25 ஆண்டுகளாக முடிவெட்டும் தொழில் செய்து வரும் தேவராஜ், கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றி இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என செய்து வருகிறார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அவரது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து மாற்று திறனாளிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், மன நோயாளிகளுக்கும் கட்டிங், ஷேவிங் செய்யும் பணியில் ஈடுபட்டார். முடிவெட்ட வரும் போது ஆதரவற்றவர்கள் சாப்பிட காசு கேட்பார்கள், சிலர் டீ கேட்பார்கள் எனவும் அவற்றை வாங்கி கொடுத்து அவர்களுக்கு ஷேவிங் செய்து முடி வெட்டிவிடுவதாகவும் தேவராஜன் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கையும் காலும் நன்றாக இருக்கும் வரை இந்த பணியை செய்ய இருப்பதாக தெரிவிக்கும் தேவராஜ், அதிக சந்தோசமும், அதிக வேதனைகள் இருந்தாலும், இங்கு ஷேவிங், கட்டிங் செய்ய வந்து விடுவதாகவும், இதை செய்யும் போது மனது நிம்மதியாகவும், அன்றைய பொழுது சிறப்பாகவும், அமைவதாக உணர முடியும் என தெரிவிக்கின்றார் சலூன் கடை தொழிலாளி தேவராஜ்.