ரஜினி – கமல் இணைந்தால் முதல்வர் யார் ? ஸ்ரீப்ரியா பதில்

Default Image

ரஜினி – கமல் இணைந்தால் முதல்வர் யார் என்று  ஸ்ரீப்ரியா பதில் அளித்துள்ளார்.
ரஜினி -கமல் என இருவரும் அரசியலில் இணைய வேண்டும் என்ற கருத்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல் 60 விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதில் நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான சந்திரசேகர் பேசினார்.அவர் பேசுகையில்,ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிவித்தார்.இவர் கூறியது முதல் இந்த அதிகம் உலாவி வந்தது.
இந்த நிலையில் தான் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் ரஜினி குறித்து கேட்டபோது,அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் அரசியலில் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்த கருத்தை கமல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில்,மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று தெரிவித்தார்.இருவரும் ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இருவரின் இணைப்பு சாத்தியமா என்ற கேள்வியும் வெகுவாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் தொலைக்காட்சி ஓன்று பேட்டி எடுத்தது. அப்பொழுது ரஜினி -கமல் இருவரின் இணைப்பு சாத்தியமா என்று  கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அவர் கூறுகையில்,மக்களுக்கு அவசியம் என்றால் இருவரின் இணைப்பு நடந்தே தீரும்.மேலும் ரஜினி கமல் இருவரும் இணைந்தால் யார் முதல்வர் என்று கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு அவர் பதில் கூறுகையில் ,என்னுடைய விருப்பம் கமல் முதல்வராகுவது தான் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்