மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். உலகளவில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று சாகசங்களை நிகழ்த்தும், Into The Wild எனும் புதிய நிகழ்ச்சியை தற்போது நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Into The Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப்பட டீசர் போல, அட்டகாசமாக, Into The Wild டீசரை பியர் கிரில்ஸ் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கி உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள அந்த நிகழ்ச்சி குறித்த டீசரை பார்த்த ரஜினி ரசிகர்கள், ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த டீசரில் டெர்ட் பைக்கில், ஹெல்மட் மற்றும் கூலர்ஸ் மாட்டியபடி, ரஜினிகாந்த், பறக்கும் காட்சிகள், டீசரில் நெருப்பாக தெறிக்கிறது என்றும் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக நிகழ்ச்சி முழுவதும் இருக்கப் போகிறது என்றும், ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட்டுகள் மற்றும் மீம்களை போட்டு வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட பலருடன் இது போன்ற சாகச நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பங்கேற்றுள்ள இந்த ஒரு நிகழ்ச்சி, தனக்கு ரொம்ப ஸ்பெஷல் என பியர் கிரில்ஸ் குறிப்பிட்டதை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…