மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்!ரஜினி சகோதரர் சத்யநாராயணராவ்
மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
அதேபோல் அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
தற்போது ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்.ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார், காலதாமதம் ஆவது நல்லதுக்குத்தான் என்று தெரிவித்துள்ளார்.