கடந்த சில நாட்களுக்கு முன் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
ரஜினிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ரஜினி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.ஆனால் ரஜினி இது குறித்து கூறுகையில்,நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக outlook india என்ற பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை இருந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் ரஜினி கருத்து குறித்து திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப்பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார்.பெரியார் பற்றி ரஜினிகாந்துக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்பதால் ரஜினி பேசாமல் இருப்பது தான் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…