இன்று நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை ! அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்பு
மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ,அரசியல் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் , ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார்.ஆனால் இந்த சந்திப்புகள் ஒவ்வொரு முறையும் நடைபெறும்போது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி சந்தித்தது தான் மிகவும் முக்கியமான சந்திப்பாகும்.அதாவது தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.ஏனென்றால் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது .
அண்மையில் கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பொது நிகழ்வில் பங்கேற்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில்,நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்திப்பில்,அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திற்கு அனுமதி கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சென்னை காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.