ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் அவகாசம்!
இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நடிகர் ரஜினிகாந்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகத்தான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா தெரிவித்திருந்தார். அந்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிரான போத்ராவின் மேல் முறையீட்டு மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த போது ரஜினிகாந்த் பதிலளிக்க பிப்ரவரி 5 வரை அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …..