ரஜினி நம்பலாம்-அதிமுக என்றும் நம்பாது – அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அதிர்ஷ்டம், அற்புதத்தை நம்பாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமாரும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினி வேண்டுமானால் அதிர்ஷ்டம், அற்புதத்தை நம்பலாம், ஆனால் நாங்கள் நம்புவதில்லை.
அதிமுகவை விமர்சித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள்.எத்தனை பேர் ஒன்று சேர்த்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளார்.