ரஜினி பாஜகவின் பி டீம்மா ? – எல்.முருகன் விளக்கம்
ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளதாக செய்திகள் அதிகம் உலாவி வந்த நிலையில் ,அது எல்லாத்தையும் எங்களுடைய அனைத்திந்திய தலைமை முடிவு செய்யும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.ஆனால் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில்,பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார்.எனவே ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளதாக செய்திகள் அதிகம் உலாவி வருகின்றன.அதாவது ரஜினி பாஜகவின் பி டீம் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,ரஜினி அவர் விருப்பப்படி கட்சி ஆரம்பிக்கிறார்.இதை எப்படி எங்களுடைய பி டீம் என்று சொல்லலாம்.அது எல்லாத்தையும் எங்களுடைய அனைத்திந்திய தலைமை முடிவு செய்யும்.பாஜகவிற்கு யார் வந்தாலும் வரவேற்போம்.நிறையபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.