கடந்த 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேஷம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார் .அன்று முதல் இன்று வரை வரவேற்ப்பும் சரி சர்ச்சையும் ஏற்படுத்திவருகிறது .இந்நிலையில் இணையதளம் மற்றும் ஆப் மூலம் உறுப்பினராக சேரலாம் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும், ஆர்வமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் திடீர்திடீரென்று அரசியல் கட்சியை ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பலர் தொடங்கிய வேகத்தில் கட்சிக்கு மூடுவிழா நடத்தி விடுகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டது.
அடுத்த நாளே பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், ரசிகர்களின் உறவினர்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வருவதற்காக புதிய இணையதளத்தையும், ‘ஆப்’பையும் தொடங்கினார். ரஜினியின் ஆப்பை, ஆண்ட்ராய்ட் போனில்தான் பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்படி கடந்த 3 நாட்களில் வெறும் 1 லட்சம் பேர் வரை மட்டுமே டவுன்லோடு செய்துள்ளனர். அவ்வாறு டவுன்லோடு செய்தவர்கள் எல்லோரும் உறுப்பினர்களாக சேர்ந்தார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஏனெனில், பத்திரிகையாளர்கள், மாற்று கட்சி நிர்வாகிகள் கூட ‘ஆப்’ பற்றி தெரிந்து கொள்வதற்காக கூட டவுன்லோடு செய்திருக்கலாம். ஆப்பை டவுன்லோடு செய்தவர்களே குறைவாக உள்ளனர். அதில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அறிவிப்பை கேட்டு இவ்வளவு குறைவானவர்களே டவுன்லோடு செய்திருப்பது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இணையதளத்தில் எவ்வளவு பேர் தங்களை பதிவு செய்து வைத்துள்ளனர் என்ற தகவல்களை, இணைய தளத்தை நடத்துகிறவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இதனால் இணைய தளத்தில் எவ்வளவு பேர் பதிவு செய்துள்ளார்கள் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஆப்பை எவ்வளவு பேர் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம். இதனால் 1 லட்சம் பேர் மட்டுமே ஆப்பை டவுன்லோடு செய்திருப்பது ரஜினிக்கே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
source: dinasuvadu.com
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…