ரீல் லைஃபில் ரஜினி அண்ணாமலை,ஆனால் ரியல் லைஃபில் நான்தான் அண்ணாமலை -ஹெச்.ராஜா பேச்சு

ரியல் லைஃபில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஹெச்.ராஜா பாஜக தேசிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த வகையில் மதுரையில் வைகை மாநாடு என்ற மாநாடு நடைபெற்று வருகிறது.இந்த விழா 12 நாட்கள் நடைபெறும்.இன்று இந்த விழாவில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில், மாட்டுத் தொழுவத்தில்தான் நான் பிறந்தேன். பால் விற்று கிடைத்த பணத்தில் வளர்ந்து படித்தேன் என்று பேசினார். மேலும் ரீல் லைஃபில் ரஜினி அண்ணாமலை என்றால், ரியல் லைஃபில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான்தான் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025