ராஜு மகாலிங்கம் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினி தனது இயக்கத்தை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமிப்பது குறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே லைக்கா நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி அண்மையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த ராஜு மகாலிங்கம், மாநிலச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…