வருவாய் ,பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்..!
தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை : தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருடைய செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும், சில முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, உயர்கல்வித்துறை புதிய செயலாளராக கோபால் ஐஏஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின் வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜேஷ் லக்கானி திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 3 வருடங்களாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காரணத்தால், அவர் இந்த பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். அதைப்போல, மனிதவள மேம்மபட்டுதுறை செயலாளராக இருந்த நந்தகுமார் மின்வாரியத் துறைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரன் நியமனம் எனவும், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின்வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நந்தகுமார் IAS நியமனம்.
ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையாளராக நியமனம். pic.twitter.com/qjz17pGBkN
— Satheesh lakshmanan ????சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) October 2, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025