அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021-ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர்.
மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொகுதிப் பங்கீடு: மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு திமுக பேச்சுவார்த்தை..!
இதற்கிடையில் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கில் ராஜேஸ் தாஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறி இருந்தது. இதைத்தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கில் இன்று ராஜேஸ் தாஸ் ஆஜரானார்.
அப்போது மேல்முறையீட்டு வழக்கில் ராஜேஷ் தாஸ் தரப்பில் வாதிட ஜனவரி 31-ஆம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் 31-ஆம் தேதி வாதிடவில்லை என்றால் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…