பதவிகள் ஏலம் -காலம் காலமாக நடப்பது தான்…பால்வளம் பகீர்

Default Image
  • தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம் காலமாக நடப்பது தான் என்று பால்வளத்துறை அமைச்சர் பேச்சு
  • குடியுரிமை சட்டம், வெங்காய விலை உயர்வால் அதிமுகவின் வெற்றி பாதிக்காது என்றும்  அமைச்சர் குரல்

தமிழத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

மேலும் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.ஆனால் உள்ளாட்சி பதவிகள் எல்லாம் ஏலம் விடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உலவி வந்தது மட்டுமல்லாமல் இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதலங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பதவிகள் ஏலம் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்தார் அதில் தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம் காலமாக நடப்பது தான், யாராவது ஊருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நான் இருக்கிறேன் என தெரிவிப்பார்கள், பதவி ஏலம் குறித்த தகவல் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் அவர் கூறுகையில்  குடியுரிமை சட்டம், வெங்காய விலை உயர்வால் அதிமுகவின் வெற்றி பாதிக்காது ஒரு வார்டில் பல பிரச்னை இருக்கும் போது,மாநிலம் முழுவதும் போட்டி போடும்  போது பிரச்னை இருப்பது சகஜமே என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்