அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கேட்கும் ராஜேந்திர பாலாஜி!
அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆவின் முறைகேடு வழக்கில் ஜாமீன் நிபந்தனையால் வெளியூர் செல்ல முடியாத நிலையில் ராஜேந்திர பாலாஜி இருப்பதால், அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்ல கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை வித்திருந்தது. இந்த நிலையில், ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க செல்ல ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.