“திமுக இனி குமுக” என்று அழைக்கப்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
திராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருப்பதால் இனி, குமுக என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ளும் முன், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேசிய அமைச்சர், திமுக வில் காலம் காலமாக குடும்ப உறுப்பினர்களே தலைமைக்கு இருப்பதால் இனி குடும்ப முன்னேற்ற கழகம் என்றே அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.