ராஜேந்திர பாலாஜி பாஜகவில் சேரலாம் – சீமான்
பாஜகவின் ஊதுகுழலாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அக்கட்சியில் இணைந்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு கொண்டிருந் போது அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் உட்பட சிலர், ரேஷன் கடை கேட்டு மனு அளிக்க சென்றனர். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு அளிக்க சென்றவர்களையும்,இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘ பாஜகவின் ஊதுகுழலாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அக்கட்சியில் இணைந்து விடலாம்.மேலும் அவர்களின் ம னதைப் புண்படுத்திய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு இஸ்லாமிய மக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.