தந்தை-மகன் உயிரிழப்பு : ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு!

Default Image

அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியலை திமுக செய்கிறது. – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டினார். இந்த குற்றசாட்டு குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், போலீஸின் நடவடிக்கை மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். எங்கே தமிழக அரசு தவறிழைத்து? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது?’ எனவும், ‘முதலமைச்சர் எங்கே முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது?’ என பல்வேறு  கேள்விகளை முன்வைத்தார்.

வழக்கமான குற்றவியல் சட்ட நடைமுறைதான் சாத்தான்குளம் வழக்கிலும் பின்பற்றப்பபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியலை திமுக செய்கிறது.’ எனவும், ‘ நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ள வழக்கில் அவதூறு விதைக்க கூடாது.’ என தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்