விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வருகிறார்.இவருக்கு அதிமுகவில் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஒரு சில காரணங்களால் அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/JWyr9sh0SP
— AIADMK (@AIADMKOfficial) July 3, 2020