முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூரை சார்ந்த பெண் ஒருவர் விருதுநகர் எஸ்.பி மனோகரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…