ராஜகோபாலன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…