#BREAKING: ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல் -சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!
ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த போக்சோ நீதிமன்றம் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 3 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.