ஹெச்.ராஜா திடிர் பல்டி! பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை….

Default Image

 

பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை என  ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிலைகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும்  அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.எனது அட்மின் செய்த தவறுக்காக நான் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சி நிகழ்ச்சிக்காக விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அட்மின் பதிவிட்டுள்ளார்.பதிவையும், அட்மினையும் நீக்கிவிட்டேன்.

பிறர் செய்வதைக் காரணம் காட்டி நானும் அதையே செய்ய விரும்பவில்லை.யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல; வருந்துகிறேன்.வன்முறை இருதரப்பிலும் நடப்பது ஏற்கத்தக்கதல்ல ; அமைதி காக்க கேட்டுக் கொள்கிறேன் என ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்