ராஜ் பவன் என்றும் மக்களுக்கானது – ஆளுநர் ரவி
அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் நமக்குள் தனித்தனியாக உள்ளது என ஆளுநர் ரவி பேச்சு.
சென்னை ராஜ் பவனில் சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, அங்கு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு. ராஜ் பவன் என்றும் மக்களுக்கானது. அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் நமக்குள் தனித்தனியாக உள்ளது. கலாச்சார அடிப்படையில் நமக்குள் ஒற்றுமை உள்ளது என தெரிவித்துள்ளார்.