ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது .
பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .
இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் .5 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .