ஊர்க்காவல் படையினருக்கு ஊதியத்தை உயர்த்துங்க – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமைலை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
ஊர்க்காவல் படையினருக்கான ஊதிய உயர்வு குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரையை ஏற்று மாநில அரசு ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 10 நாட்களில் பணி வழங்கப்படுவதாக அரசு கூறினாலும், பல ஊர் காவல் படையினர் மாதம் முழுவதும் பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவித்ததை முறைப்படுத்த வேண்டும். யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.
ஊர்க்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.5,600 ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை உயர்த்த தமிழக பாஜக தலைவர் திரு K.அண்ணாமலை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.#KAnnamalai pic.twitter.com/ssHpf27XXW
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 22, 2021