சென்னையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.இதில் சென்னையிலும் மழை நன்றாக பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கு காரணம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வட மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினாரகள்.ஆனால் தற்போது மழை பெய்த நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் புழல்,செம்மரப்பாக்கம் ,பூண்டி ஆகிய ஏரிகளில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இது உண்மையிலே சென்னைவாசிகளுக்கு நல்லது தான்.
ஆனால் சென்னை மாநகரை பொறுத்தவரை ஒரு பெரிய மழைக்கு கூட தாக்கு பிடிக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.அந்த வகையில் தான் தற்போது சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வந்தது.இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினார்கள்.குறிப்பாக பெசன்ட் நகர்,திருவல்லிக்கேணி,சேத்துப்பட்டு,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் கடும் அவதிக்கு மத்தியிலே சென்றனர்.மழை பெய்தது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்,பிரதான இடங்களில் நேர் தேங்குவது அவர்கள் மத்தியில் சற்று அவதியை ஏற்படுத்தியுள்ளது.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…