ஒரு நாள் இரவு பெய்த மழை !நிலை தடுமாறிய சென்னை மாநகரம் !

Default Image

சென்னையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால்  பல  இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.இதில் சென்னையிலும் மழை நன்றாக பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கு காரணம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வட மாவட்டங்களில்  கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினாரகள்.ஆனால் தற்போது மழை பெய்த நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும்  புழல்,செம்மரப்பாக்கம் ,பூண்டி ஆகிய ஏரிகளில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இது உண்மையிலே சென்னைவாசிகளுக்கு நல்லது தான்.

ஆனால் சென்னை மாநகரை பொறுத்தவரை ஒரு பெரிய  மழைக்கு கூட தாக்கு பிடிக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.அந்த வகையில் தான் தற்போது சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வந்தது.இதனால் சென்னையில்  பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினார்கள்.குறிப்பாக பெசன்ட் நகர்,திருவல்லிக்கேணி,சேத்துப்பட்டு,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட  இடங்களில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் கடும் அவதிக்கு மத்தியிலே சென்றனர்.மழை பெய்தது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்,பிரதான இடங்களில் நேர் தேங்குவது அவர்கள் மத்தியில் சற்று அவதியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்