மருத்துவமனையில் புகுந்த மழைநீர்..பொதுமக்கள் கடும் அவதி..!
வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இதனால், சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, மெரினா, காசிமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் இருந்த குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை..!#Chennai #rains pic.twitter.com/oACiGNFgPL
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 22, 2020