மழைநீர் வடிகால் பணிகள் – தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு..!

Default Image

மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் உத்தரவு. 

பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவுபெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு / பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் (Barricade) மற்றும் அடையாள பலகைகள் (Sign Boards) வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள Manual Cover திறந்திருப்பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் (Sign Boards) ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், தொடர்புடைய துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

iraiyanbu arikkai

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்