#RainUpdate: சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத மழை.! ஒரே நாளில் 44 செமீ.!

Default Image

தமிழகத்தில் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மிக கனமழைக்கு மேகவெடிப்பு காரணம் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வாங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் பெய்த அதி கனமழை இதுவாகும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பொழிந்ததற்கு காரணம் மேக வெடிப்பு அல்ல, மேக வெடிப்பு என்றால் அதிக மழை பொழிவுக்கு முன்பும், பின்பும் மழை இருக்க கூடாது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இயல்பாகவே சீர்காழியில் அதிக மழை பொழிந்துள்ளது. எனவே, தமிழகத்தில் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மிக கனமழைக்கு மேகவெடிப்பு காரணம் இல்லை என என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்று, மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மிக அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீண்டபிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested