தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.!
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல்,திருச்சி,மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.எனவும் கேரளா கடற்கரை மற்றும் கர்நாடகா கடற்கரையில் இலட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்தகாற்று 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.