தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளது.
திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.