6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்…!வானிலை ஆய்வு மையம்
வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல், அரபிக் கடல் நோக்கிச் செல்கிறது.தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்.மேலும் வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.